கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் காணவில்லை என முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இவரை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காணவில்லை என்ற அவரது சொந்த தொகுதியான ரே பரேலியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் எனவும் அப்போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர்களை காங்கிரஸ் கட்சியினர் தேடிப்பிடித்து அகற்றி வருகின்றனர்.