விண்வெளித்துறையில் இந்தியா சூப்பர் பவராக திகழ்கிறது: பிரதமர் மோடி
நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
12:47 27-03-2019
இந்தியா ஏவுகணை எதிர்ப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக சோதித்து வெற்றி பெற்றது. நமது தேசத்தின் பயணத்திலும் மிகுந்த பெருமையை தருவதாக இந்த தருணம் அமைந்துள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
12:39 27-03-2019
நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் முழு வீடியோ இணைப்பு.
12:38 27-03-2019
இந்திய விஞ்ஞானிகளை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்
12:33 27-03-2019
உலக அளவில் விண்வெளித்துறையில் பெரிய சக்தியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து இந்தியா உள்ளது.
12:28 27-03-2019
நாட்டு மக்களுடன் உரையாற்றலை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி
நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மிகப் பெரிய அறிவிப்பை தான் வெளியிடப் போவதாக அறிவித்து உள்ளார். அதில் என் அன்பார்ந்த மக்களே... இன்று 11.45 மணி முதல் 12 மணி வரை, நான் நாட்டு மக்களின் மத்தியில் ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் கொண்டு வருவேன். தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் எனது செய்தியைக் கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.