புதுடெல்லி: திரிணமுல் காங்கிராஸ், எம்.பி. மற்றும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி, தன் பதவியை ராஜ்யசபாவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்கத்தில், 1950-ம் ஆண்டு பிறந்த மிதுன் சக்ரவர்த்தி, 1976-ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கினார். திரிணமுல் காங்கிராஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக 2014 ஏப்ரல், 3-ம் தேதி முதல் பதவி வகித்து வந்தார். 


தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தை உலுக்கி, சகாரா ஊழல் வழக்கில், மிதுன் சக்ரவர்த்திக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக அவர் செயல்பட்டுள்ளார். 


எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்ததற்கு, உடல் நல பாதிப்பு தான் காரணம் என கூறப்படுகிறது.