#MeToo மூலம் தனக்கு பாலியல் புகார் தெரிவித்தவர்கள் மீது மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்குப்பதிவு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது 12-க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய அளவில் பெரும் சலசலப்பை கிளப்பி வரும் #MeToo ஹாஷ்டேக் மூலமே சமூக வலைதளங்களில் பெண்கள் அக்பருக்கு எதிராக புகார் தெரிவித்தனர். 


இதைத்தொடர்ந்து, எம்.ஜே.அக்பர் பதவிவிலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த புகார்கள் குறித்து எம்.ஜே.அக்பர் பதில் அளிக்க வேண்டும் எனவும் சக பெண் அமைச்சர்களான மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.


இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டில்லி திரும்பிய மத்திய அமைச்சர் அக்பர் ஒரு விளக்கம் அளித்தார். இதில் தான் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடவில்லை. தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியல் நோக்கம் கொண்டவை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் அவர் சார்பில் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அமைச்சர் அக்பர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முதன் முதலாக தன் மீது அவதூறு பரப்பிய பிரியரமணி உள்ளிட்ட சிலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.