ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நியமனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.  


பதவிக்கு வந்தவுடனேயே அதிரடியாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. அதிலும் இந்திய வரலாற்றிலே முதல்முறையாக தனது மாநிலத்திற்கு 5 துணை முதல்வர்களை நியமித்தார். இதில், சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த நகரி தொகுதி எம்.எல்.ஏவும்,  நடிகையுமான  ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி அடிப்படையில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரோஜாவுக்கு அமைச்சரவையிலும் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது. 


இந்த நிலையில், அரசுத்துறையில் ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.