மத அடிப்படையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக MLA ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேரள சட்டமன்ற தேர்தலின்போது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் KM ஷாஜி ஆழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது இவர் மத அடிப்படையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பினை இன்று கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பின்படி 
ஷாஜி தகுதிநீக்கம் செய்யப்பட்டத்தாக அறிவிக்கிப்பட்டுள்ளது.


KM ஷாஜி முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணித் தலைவராகவும், கட்சியின் அகில இந்திய பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார்.



2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லீம் அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வாக்காளர்களுக்கு ஹாஜி வழங்கியதாக சுயேச்சை வேட்பாளர் MV நிகேஷ் குமார், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


இந்த வழக்கில், நீதிபதி பி.டி.ராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஹாஜியை பதவிநீக்கம் செய்வதுடன், ஆழிக்கோடு தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், MV ஹாஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.