பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் அளிப்பவருக்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) கட்சி நிதி வெகுமதிகளை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக மும்பையின் பாந்த்ராவில் காணப்பட்ட சுவரொட்டி தெரிவிக்கையில் சட்டவிரோத குடியோறிகளின் தகவல் அளிப்பவருக்கு ரூ.5555 அளிக்கப்படும் என தெரிவிக்கிறது. அவுரங்காபாத்தில் காணப்படும் மற்றொரு சுவரொட்டி ரூ.5000 அளிக்கும் என தெரிவிக்கிறது.


மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உறவினர் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அரசு ஆனது இந்துத்துவ சித்தாந்தத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது. 


மகாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா சமீபத்தில் பாஜக-வுடனான உறவை முறித்துக் கொண்டு இரண்டு மதச்சார்பற்ற கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில், தற்போது சிவசேனா-வின் வெற்றிடத்தை நிறப்பும் முயற்சியில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா முற்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முயற்சியில் சமீபத்தில் ராஜ் தாக்கரே பாஜக தலைவர்களை சந்தித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.


அந்த வகையில் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் மோடி அரசாங்கத்தை ஆதரிக்க MNS சமீபத்திய வாரங்களில் முன்வந்துள்ளது, மேலும் "வங்கதேசத்தவர்" இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்று எச்சரிக்கும் சுவரொட்டிகளை வெளியிட்டு வருகின்றனர்.


குடியுரிமை (திருத்த) சட்டம் தொடர்பான போராட்டம்.


மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் நாடு தழுவிய வன்முறைக்கு வழிவகுத்துள்ளது.  குடிமக்கள் பதிவு, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக பரவலான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் MNS-ன் இந்த பிரச்சாரம் களமிறங்கியுள்ளது.


இந்த வார தொடக்கத்தில் கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்பாளர்கள் இடையே ஏற்பட்ட இனவெறி கலவரங்கள்  நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிள்ளது; ஏராளமான மக்கள் காயம் காரணமாக இன்னும் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே டெல்லி ஆளும் ஆம் ஆத்தி கட்சியின் பிரமுகர் தாஹிர் உசேன், புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடுத்து, வழக்கின் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.