வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஐஐடி மெட்ராஸ் ஒரு அசத்தலான முயற்சியை மேற்கொண்டுள்ளது
கொரோனா நோயாளிகளை பரிசோதித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஐஐடி MediCAB என்னும் நடமாடும் மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளது
இந்த நடமாடும் மருத்துவமனையை இரண்டு மணி நேரத்தில் நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிவிடலாம். சென்னை ஐஐடி ஸ்டார்ட் அப் பிரிவு இதை வடிவமைத்துள்ளது
எளிதில் அமைக்கக் கூடிய இந்த நடமாடும் மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமை சிகிச்சை அளிக்க முடியும் என்று ஐஐடி மெட்ராஸ் வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.
ALSO READ | Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!
சென்னை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்த MediCAB என்ற நடமாடும் மருத்துவமனை கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Modulus Housing என்னும் இந்த Startup நிறுவனம் நாடெங்கிலும் பரவலாக, இந்த நடமாடும் மருத்துவப் பிரிவை, அதாவது மைக்ரோ ஹாஸ்பிடல்களை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது.
இந்த மெடிகேப்பில் நான்கு மண்டலங்கள் இருக்கும்.
ஒன்று மருத்துவருக்கான அறை, இரண்டாவது தனிமைப்படுத்தப்படும் வார்டு. மற்றும் இரண்டு படுக்கைகள் கொண்ட ஐசியு பிரிவு ஆகியவை இருக்கும் “
Modulus Housing என்னும் Startup நிறுவனம், ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) உடன் கூட்டு சேர்ந்து, இந்த திட்டத்திற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட சாதனங்களை வழங்கியது.
2018 ஆம் ஆண்டில் இரண்டு ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட Modulus Housing என்னும் நிறுவனம், IIT-M Incubation Cell உதவியுடன், முன்னரே எழுப்பட்ட கட்டமைப்புகள் மூலம் வீடுகளை கட்டும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை எளிதாக்குவதற்காக அவர்கள் இந்த நடமாடும் மருத்துவமனையை வடிவமைத்துள்ளனர்.
ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்
"கேரளாவில் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், மைக்ரோ மருத்துவமனைகளின் தொழில்நுட்பம் மற்றும் நன்மைகளைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. MediCAB என்பது இதற்கான உடனடி உள்கட்டமைப்பு தீர்வாக உள்ளது. இதை எட்டு மணி நேரத்தில் நான்கு பேர் எளிதாக அமைக்கலாம். இந்த அமைப்பை பிரித்து மடிக்கும் போது, இது எடுத்துக் கொள்ளும் பரப்பளவு ஐந்து மடங்கு அளவு குறைக்கப்படுகின்றது. இதனால், இதனை, எடுத்து செல்லும் போக்குவரத்துக்கு செலவு மிகவும் குறைவு, ”என்று தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ரவிச்சந்திரன் கூறினார். எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதில் சுகாதார உள்கட்டமைப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்று பரவல் குறைந்த உடன், இதனை மைக்ரோ மருத்துவமனைகளாக, கிளிக்குகளாக பயன்படுத்தலாம். ஊரக பகுதிகளின் மருத்துவ கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் இதனை எளிதாக கொண்டு சென்று பயன்படுத்தலாம்.
Modulus Housing நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு சென்னையில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.