Model Tenancy Act: வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாதிரி குத்தகை சட்டம் (Model Tenancy Act) அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் வரைவு இனி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்படும். புதிய சட்டத்தை உருவாக்கியோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்தோ இதைச் செயல்படுத்தலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்க ஒரு திட்டம் உள்ளது. வாடகை சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாக தீர்க்க மாநில அரசுகள் வாடகை நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களை அமைக்கலாம். அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் வீடுகளை வாடகைக்கு எடுப்பது தொடர்பான சட்ட கட்டமைப்பை சீரமைக்க இது உதவும். இதன் மூலம் இத்துறையில் மேலும் வளர்ச்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது.


வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் (Tenants) பெரும்பாலும் பல இன்னல்களை அனுபவிகின்றனர். வரம்பில்லாமல் வாடகையில் ஏற்றம், அதிகப்படியான வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பித்தலில் உள்ள சிக்கல், வீட்டை காலி செய்வதில் ஏற்படும் சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம். 


- வீட்டை வாடகைக்கு எடுத்து வசிப்பவர்களின் நலனுக்காக இந்த சட்டத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


- வாடகைக்கு வருவோரிடம் 2 மாத வாடகைக்கு மெல் வாடகை முன்பணம் (அட்வான்ஸ்) வாங்க முடியாது.


- வாடடைக்கு வருபவர்களோ அல்லது வீட்டு உரிமையாளரோ விரும்பினால் வாடகை ஒப்பந்த நகலை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.


ALSO READ: உரிமையாளர்கள் - வாடகை வீட்டுகாரர்களுக்கு நலன்களுக்காக விரைவில் புதிய சட்டம்


- மத்திய அரசின் (Central Government) அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.


- முன்பு வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் இனி ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். 


- ஒப்பந்தம் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ பதிவு செய்யப்படலாம். எனினும், ஒப்பந்தம் பதிவு செய்யப்படாவிட்டால், இரு தரப்பினரும் நிவாரணம் கோரி நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது.


- ஒப்பந்தம் போடப்படாவிட்டால், வீட்டு உரிமையாளருக்கு (House Owners) மட்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கான அனுமதி வழங்கப்படும்.


- புதிய சட்டத்தின் படி, வாடகையில் இருப்பவர் வீட்டை காலி செய்யாவிட்டால், சட்டப்படி வீட்டு வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.


- வீடுகளின் உரிமையாளர்களுக்கும் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் புரிதலை உருவாக்கவும், சிக்கல்களை எளிதாக திர்க்கவும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும். 


ALSO READ: "வாடகை வீட்டுவசதி திட்டத்தின்" கீழ் இனி வாடகைக்கு வீடு மலிவாக கிடைக்கும் -முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR