OMICRON VACCINE: ஒமிக்ரான் தடுப்பூசி கண்டுபிடிப்பு? அமெரிக்க நிறுவனம் தகவல்
அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், ஒமிக்கிரானைக் கட்டுப்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வேரியண்டை விட வேகமாக பரவி வருகிறது. இதனால், அச்சத்தின் பிடியில் இருக்கும் உலகம், இதில் இருந்து மீள்வது எப்படி? என்பது யோசித்துக்கொண்டிருக்கிறது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. இந்தியாவில், மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான், 7-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாதிப்பை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ALSO READ |Omicron: 7 மாநிலங்களில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒமிக்ரான்
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசனையும் நடத்தி வருகிறது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பூஸ்டர் டோஸ் மக்கள் செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா தடுப்பூசி நிறுவனம், ஒமிக்ரானை தங்கள் நிறுவன தடுப்பூசி கட்டபடுத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 டோஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டால் ஒமிக்ரானுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகரிப்பதாக கூறியுள்ளது. 50 மைக்ரோகிராம் பூஸ்டர் டோஸ் மருந்து, பூஸ்டருக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 37 மடங்கு ஒமிக்ரானுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி அளவை அதிகரிப்பதாக கூறியுள்ளது. 100 மைக்ரோகிராம் மருந்தை செலுத்தினால் 83 மடங்கு ஒமிக்ரானுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ALSO READ | Omicron symptoms: எச்சரிக்கை! இதுதான் Omicron இன் புதிய அறிகுறிகள்
அதேநேரத்தில், இந்த முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், அதிகாரிகளுடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் மாடர்னா கூறியுள்ளது. 100 மைக்ரோகிராம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட டோஸூடன் ஒப்பிடும்போது சில எதிர்மறை விளைவுகளை கொண்டிருப்பதாக மாடர்னா கூறியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR