மோடி தலைமையிலான அமைச் சரவையில் மாற்றம்
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் என்பது இது 2-வது முறையாகும். மேலும் இன்றயை மாற்றத்தில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இப்போதைய மாற்றத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் தலித் இனத்தவர்களுக்கு இன்றைய மாற்றத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில்:- மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவில்லை. விரிவாக்கம் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றார்.