புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஜூலை 6 முதல் 8 ஆம் தேதிக்குள் அமைச்சரவை விரிவாக்கப்படலாம். மத்திய அமைச்சரவை தற்போது 53 அமைச்சர்களைக் கொண்டுள்ளது. விரிவாக்கத்திற்குப் பிறகு இது 81 உறுப்பினர்களைக் கொண்டிருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்டணி கட்சிகளும் இந்த முறை மோடி அமைச்சரவையில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். மேலும் ஜே.டி.யு, எல்.ஜே.பி தவிர, அப்னா தல் உள்ளிட்ட கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம்.


எந்த மாநிலத்திலிருந்து யார் மோடி அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன? 


உத்தரபிரதேசம்: மோடி அமைச்சரவையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்று தகவல் தொடர்பு அமைச்சர்கள் சேர்க்கப்படலாம். அப்னா தளத்திலிருந்து அனுப்ரியா படேலும் அமைச்சரவையில் இடம் பெறலாம்.


பீகார்: பீகார் மாநிலத்தின் இரண்டு முதல் மூன்று தலைவர்களை அமைச்சரவையில் சேர்க்கப்படலாம். இதில், பாஜகவின் (BJP) சுஷில் குமார் மோடி, ஜேடியுவின் ஆர்சிபி சிங், எல்ஜேபியின் பசுபதி பராஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.


மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்று முதல் இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் ராகேஷ் சிங் ஆகியோரின் பெயர்கள் இதில் உள்ளன.


மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒன்று முதல் இரண்டு அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் சேர்க்ப்படலாம். இதில் நாராயண் ரானேவின் பெயரும் உள்ளது.


ALSO READ: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர் அமைச்சரவையில் இடம் பெறலாம்.
 


ராஜஸ்தான்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைச்சர் மோடி அமைச்சரவையில் இடம்பெறக்கூடும். 


அசாம்: அசாமில் இருந்து ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்கள் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் சேர்க்கப்படலாம். இதில், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவாலின் பெயர் முன்னணியில் உள்ளது.


மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் (West Bengal) இரண்டு தலைவர்களுக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் பாஜக எம்.பி. சாந்தனு தாக்கூர், நிசித் பிரமானிக் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. இது தவிர, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு அமைச்சரையும் அமைச்சரவையில் சேர்க்கக்கூடும்.


பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி, டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Doctor Harsh Vardhan), நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலாகாக்களை வைத்திருக்கும் அமைச்சர்கள் ஆவர்.


ALSO READ: உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR