புது டெல்லி: கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நாட்களுக்கு இடைகாலத்தில் ஊதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தணிப்பதற்கும் மோடி அரசு (Modi Government) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை, மத்திய தொழிலாளர் அமைச்சகம் (Labour Ministry) பான்-இந்தியா (Pan-India) அடிப்படையில் 20 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
 
ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மிக மோசமாக பாதிப்படைந்துள்ளனர். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் ஊதியக் குறைப்பு அல்லது வேலை இழப்பை போன்ற பிர்ச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பீட்டின்படி, இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் 40 கோடி முறைசாரா துறை தொழிலாளர்கள் கடும் வறுமைக்கு தள்ளப்படலாம் என எச்சரித்து உள்ளது. 
 
கோவிட் -19 இன் பின்னணியில் எழும் பிரச்சினைகள் காரணமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பான்-இந்தியா அடிப்படையில் தலைமை தொழிலாளர் ஆணையர் (Chief Labour Commissione) (சி.எல்.சி) (சி) அலுவலகத்தின் கீழ் 20 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
மத்திய மண்டலத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் ஒருங்கிணைப்பு மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தணிப்பதற்கும் இது செயல்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த அழைப்பு மையங்களை, தொழிலாளர்கள் தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அணுகலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகளை தொழிலாளர் அமலாக்க அதிகாரிகள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், பிராந்திய தொழிலாளர் ஆணையர்கள் மற்றும் அந்தந்த பிராந்தியங்களின் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் போன்றவர்கள் நிர்வகிக்கின்றனர். அனைத்து 20 கால் சென்டர்களின் செயல்பாடுகளையும் தினசரி அடிப்படையில் தலைமை தொழிலாளர் ஆணையர் கண்காணித்து மேற்பார்வையிடுவார் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதன்மூலம் சமர்பிக்கப்படும் நிலைமையை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் சில பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் செய்யப்பட்டு மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.