New Wage Code: இனி 30 நிமிட கூடுதல் வேலைக்கும் ஓவர் டைம் கிடைக்கும்!
மோடி அரசாங்கம், ஏப்ரல் 2022 முதல், தொழிலாளர் சட்டக் குறியீட்டில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இதனால், சம்பளம், சேமிப்பு மற்றும் கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படும்.
மோடி அரசாங்கம், ஏப்ரல் 2022 முதல், தொழிலாளர் சட்டக் குறியீட்டில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இதனால், சம்பளம், சேமிப்பு மற்றும் கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படும்.
தொழிலாளர்களுக்கு பல வகைகளில், நன்மைகளை கொடுக்கும் புதிய தொழிலாளர் சட்ட குறியீடு தொடர்பான வரைவை மோடி அரசு தயாரித்து வருகிறது. இந்த புதிய தொழிலாளர் குறியீடு ஏப்ரல் மாதத்திற்குள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைச் செயல்படுத்துவதற்கு முன், மோடி அரசாங்கம் அதன் விதிகளை அமல்படுத்திய பின் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சம்பள அமைப்பு மாறும்
மோடி அரசின் புதிய ஊதியக் குறியீடு சட்டம் அமலுக்கு வரும்போது, அது ஊழியர்களின் சம்பள அமைப்பை முற்றிலும் மாற்றிவிடும். ஊழியர்களின் 'டேக் ஹோம் சம்பளம்' குறையும் என்றாலும், அவர்களுக்கான பிஎப் தொகை அதிகரிக்கும். ஏனெனில் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால், ஊழியர்களின் பிஎப் பங்களிப்பும் அதிகரித்து அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
ALSO READ | New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் வார இறுதி விடுமுறை கிடைக்கும்..!!
இதுமட்டுமின்றி, பிஎப் உடன், பணிக்கொடையில் பங்களிப்பும் அதிகரிக்கும். அதாவது, டேக் ஹோம் சம்பளம் கண்டிப்பாக குறையும் என்றாலும், பணியாளர் ஓய்வு பெறும்போது அதிக தொகை கிடைக்கும். புதிய ஊதியக் குறியீடு (New Wage Code) அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பான விதிகள் மாறி, ஒவ்வொரு தொழில் மற்றும் துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் சமத்துவம் இருக்கும்.
அரசாங்கம் நான்கு குறியீடுகளை அமல்படுத்த உள்ளது
29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 புதிய ஊதியக் குறியீடுகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் மூன்று தொழிலாளர் குறியீடுகள், தொழில்துறை உறவுகள், வேலை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாற்றியது. இந்த விதிகள் செப்டம்பர் 2020 இல் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் குறியீடு - ஊதியம் குறித்த குறியீடு, இரண்டாவது - தொழில்துறை உறவுகள் குறியீடு, மூன்றாவது - தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (OSH) மற்றும் நான்காவது மற்றும் இறுதி குறியீடு சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை அடங்கும்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்தப் பிரிவின் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், பிஎஃப் மற்றும் ஆண்டு விடுமுறைகள் குறித்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈட்டிய விடுப்பை 240ல் இருந்து 300 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
EPFO வாரிய உறுப்பினரும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விர்ஜேஷ் உபாத்யாய் கூறுகையில், ஊழியர்களின் பணி நேரம், ஆண்டு விடுமுறைகள், ஓய்வூதியம், PF, டேக் ஹோம் சாலரி, ஓய்வூதியம் போன்ற முக்கியமான அம்சங்கள் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என்றார்.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி! மீண்டும் சம்பள உயர்வு
30 நிமிடங்கள் கூடுதல் வேலை செய்தாலே, அது ஓவர்டைமாக கருதப்படும் என்ற வகையில் மோடி அரசு அமல்படுத்த உள்ள இந்த புதிய சட்டத்தின் வரைவில், எந்த ஒரு ஊழியரையும் 5 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்ற விதியும் உள்ளது. ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்குப் பிறகும் அவருக்கு 30 நிமிடங்கள் பிரேக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கும் கருதப்படுகிறது. இதனால் தான் மோடி அரசு அதை விரைவில் செயல்படுத்த ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு, ஊதிய உயர்வுக்கு தயாராகும் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR