புதுடில்லி: தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) சட்டம் கீழ் அசாமில் குடியுரிமை வழங்கப்பட்ட தம்பதியர்களின் குழந்தைகளை, அவர்களிடம் பிரிக்கப்பட மாட்டார்கள் என்றும், அந்த குழந்தைகள் அசாமில் உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அரசு நேற்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தின் கீழ் பெற்றோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அவர்களின் குழந்தைகளுக்கு என்.ஆர்.சி வழங்க வில்லை. இதுக்குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை நீதிபதி நீதிபதி எஸ். போப்டே தலைமையிலான பெஞ்ச் முன் என்.ஆர்.சி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான வழக்கறிஞர் (அசாம் மக்கள் சார்பில்), அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட என்.ஆர்.சி- மூலம் சுமார் 60 குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை என்னவாகும்? என்.ஆர்.சி செயல்முறை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காட்டிய போதிலும், குழந்தைகள் விலக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்களின் பெற்றோர்கள் என்.ஆர்.சி சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.


அதற்கு பதில் அளித்து பேசிய அட்டர்னி ஜெனரல் (Attorney General of India) கே.கே. வேணுகோபால், என்.ஆர்.சி மூலம் அசாமில் குடியுரிமை வழங்கப்பட்ட தம்பதியர்களின் குழந்தைகள் தடுப்பு மையங்களுக்கு அனுப்படமாட்டார்கள் என்று உறுதி அளித்தார். மேலும் என்.ஆர்.சி இறுதி பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் விலக்கப்பட்டுள்ளதாக வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக இந்திய யூனியன் மற்றும் அசாம் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது