நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கானது தான் இந்த செய்தி. வீடு வாங்குவோர் பயனடையவும், கட்டுமான தொழிலுக்கு ஊக்கம் அளிக்கவும் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்துவருகிறது. மேலும் ஒரு வருடத்திற்கான கடன் இணைப்பு மானியம் திட்டத்தையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12% ஜி.எஸ்.டி வரி கட்டுமானத் தொழிலை கடுமையாக பாதிக்கிறது என தொடர்ந்து கட்டுமான நிறுவனங்கள் கூறிவந்தன. இதை மனதில் வைத்து மதிய அரசு ஜிஎஸ்டி வரி விகித்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி வரியும் குறைக்கப்படலாம்.


அதே நேரத்தில், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடன் இணைப்பு மானியம் திட்டத்தை அரசாங்கம் மேலும் ஒரு வருடம் நீடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், இந்த வருடம்(2019) மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுக்குறித்து சனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பயன்பெரும் வகையில் சில முக்கிய முடிவுகள் மத்திய அரசு எடுக்கும் எனத் தெரிகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் ரியல் எஸ்டேட் துறை, தற்போது உள்ள மந்தநிலையில் இருந்து, அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்.