வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர படுக்கைகளுடன் கூடிய சிறப்பு விமானம்
மருத்துவமனை படுக்கைகளுடன் கூடிய சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு.
புது டெல்லி: மார்ச் 22 முதல் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கொண்டுவருவதற்காக அடுத்த மாத தொடக்கத்தில் பல சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான முயற்சிகளை இந்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஏறக்குறைய ஒரு வாரமாக, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான முறைகள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.
இந்த முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய அழைத்து வரும் வேளையில், அவர்களுக்கான மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை ஒதுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் தேசிய ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் சிறப்பு விமானங்கள் மூலம் கொண்டு வரப்படுவார்கள். இதுக்குறித்து நாட்டின் மூத்த-அதிக அதிகாரியான கவுபா, வெள்ளிக்கிழமை தனது வீடியோ மாநாட்டில் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் அதிகாரிகளுடன் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டார்.
மே 3 அன்று ஊரடங்கு உத்தரவு நீக்குவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் குடியிருப்பு பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, அரசாங்கம் எந்த திசையில் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் திங்களன்று மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் உரையாட உள்ளார். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்பது தெளிவாகிறது என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் மக்களை மதிப்பீடு செய்வதற்கான செயல்முறையை வெளியுறவு அமைச்சகம் தொடங்க உள்ளது. உதாரணமாக, மத்திய அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, கேரளாவுக்கு மட்டும் 1,00,000 வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறது. அவர்கள் நீண்ட காலத்திற்கு இல்லாவிட்டால், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்க வருகை தருவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல டெல்லி, மகாராஷ்டிரா பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த வெளிநாட்டினர் பெருமளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நோக்கத்திற்காக MEA ஒரு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படும் இந்திய குடிமக்கள் தங்கள் மாநிலத்திற்கு அருகிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இதனால் உள்நாட்டு பயணத்திற்கான தேவை குறைக்கப்படுகிறது. மேலும் இந்திய வரும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்.
மார்ச் 22 முதல் சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த காரணத்தினாலேயே, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வளைகுடா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். விரைவில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். இந்த நாடுகளில் 9 மில்லியனுக்கும் அதிகமான இந்திய புலம்பெயர்ந்தோர் உள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கோரிக்கைகளுக்கு இடமளிப்பதை விட, அரசாங்கம் இந்த நாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதற்காக மருத்துவ பொருட்கள் மற்றும் உதவிகளையும் வழங்கியது.