பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) வருகை புரிந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உணவு முகாம்கள் நடத்தப்படுவதாக உறுதிபடுத்தியுள்ளார்.


 



 


பீகாரில் வெள்ளம் சூழ்ந்ததால் 480 பேர் உயிரிழந்தனர்.


19 மாவட்டங்களில் 185 தொகுதிகள், 2,313 பஞ்சாயத்துகளில் 158.305 லட்சம் பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் பேரிடர் சீரமைப்பு துறை தெரிவித்துள்ளது.


 



 


நேபாளத்தில் இருக்கும் ஆறுகள் நிரம்பியதில் கிஷன்கஞ்ச், அரியா, பூர்னியா மற்றும் கத்திஹர், சப்ளேல், சஹர்ஸா, பாகா, கோபல்கனேஜ், மதுபாணி, சித்தமரி, காகரியா, தர்பங்கா மற்றும் மதேபுரா ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.