பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.


வங்கக் கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்காக இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்டது.


வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, கலாச்சாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட 14 துறைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நாடுகள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் இன்றும், நாளையும் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.



உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.