ரபேல் விவகாரத்தில் மோடி வாய் திறக்க வேண்டும் - ராகுல்!
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
ரபேல் போர்விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே விமர்சித்துள்ளார். இதற்குப் பிரதமர் மோடி என்ன பதில் கூறப்போகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... "இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் 'டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு தனிப்பட்டமுறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் "இந்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியைத் திருடன் என விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் பிரதமரின், பிரதமர் அலுவலகத்தின், மாண்பையும், மரியாதையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. நமது வீரர்களின், விமானப்படையின் எதிர்காலத்தையும் கேள்விக்குக்குறியாக்கியுள்ளது.
இந்த விவகாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே குற்றச்சாட்டை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்கிறாரா இல்லை பிராங்கோயிஸ் ஹாலன்டே பொய் கூறுகிறார் என மறுக்கிறாரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும். என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!