20:06 30-05-2019
மகேந்திர நாத் பாண்டே, சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். #ModiSwearingIn


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



20:01 30-05-2019
தர்மமேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரஹ்லாத் ஜோஷி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். #ModiSwearingIn


 




19:46 30-05-2019
டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் பியுஷ் கோயல் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.


 




19:40 30-05-2019
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், ஹர்சிம்ரத் கவுர் பாதல், அர்ஜுன் முண்டா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.


 



 



19:38 30-05-2019
ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.


 




19:32 30-05-2019
முன்னாள் வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.


 




19:30 30-05-2019
நரேந்திர மோடி பிரதமராக பதவியேர்ப்பதை கொண்டாடும் லக்னோ பாஜக தொண்டர்கள்.


 




19:26 30-05-2019
ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.


 




19:20 30-05-2019
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரிக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கு எந்த இலாகா என்று இன்னும் அறிவிக்கப்பட வில்லை.


 



 



 




19:14 30-05-2019
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை தொலைகாட்யில் பார்த்து ரசிக்கும் அவரது தாயார் ஹீரா பென்.


 




புது டெல்லி: நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி, இன்று இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.


இந்த நிலையில், தற்போது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடம் அமித் ஷாவும் பதவியேற்றார். அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.