மெக்ஸிகோ சென்றார் பிரதமர் மோடி
அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை அமெரிக்காவில் முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தற்போது மெக்ஸிகோ சென்றடைந்தார். அங்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஏற்கனவே கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு அதிபர் ஓபாமாவை சந்தித்து பேசினார். தற்போது மெக்ஸிகோ சென்றுள்ளா பிரதமர் மோடி அங்கு மெக்ஸிகோ அதிபருடன் பேச்சுவாரத்தை நடத்தவுள்ளார்.