உ.பி முதலீட்டாளர்கள் மாநாட்டினை துவங்கி வைக்கிறார் பிரதமர்
நாளை லக்னோவில் நடைப்பெறவுள்ள, உபி முதலீட்டாளர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைக்கின்றார்!
நாளை லக்னோவில் நடைப்பெறவுள்ள, உபி முதலீட்டாளர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைக்கின்றார்!
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் இருதி நாளான பிப்.,22 அன்று குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தால் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. மாநிலத்தின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்த இந்த மாநாடு உதவும் என்ற நோக்கத்தினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பின்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், செக் குடியரசு, தாய்லாந்து, ஸ்லோவாக்கியா மற்றும் மொரிஷியஸ் போன்ற குறிப்பிடத்தக நாட்டினர் கலந்துக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உச்சிமாநாட்டின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!