தனது பிறந்தநாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனி காரில் சென்று குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாய் ஹீராபென் மோடியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


குஜாராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல் மந்திரி, கவர்னர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்களும், அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்:- பிரதமர் மோடி நல்ல நலம், மகிழ்ச்சியுடன், பல ஆண்டுகள் நாட்டிற்காக சேவை ஆற்ற வேண்டும் என அவரை வாழ்த்துகிறேன். பிரதமர் மோடியும், நமது நாடும் மிகப் பெரிய சாதனைகளை அடைவதற்கு இந்த ஆண்டின் துவக்க நாளாக இந்த நாள் அமையட்டும் என தெரிவித்துள்ளார்.


 



 


தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர்க்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறிய வாழ்த்துச்செய்தி:- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல்லாண்டு வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


 



 


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்:- ராகுல் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ராகுலின் பிறந்தநாளுக்கு மோடி, டுவிட்டரில் வாழ்த்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


 



 


காங்கிரஸின் தலைவர்கள் பலரும்,  பா.ஜ.,வின் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் 66-வது பிறந்த நாளையொட்டி அரசு சார்பில் பல்வேறு நலதிட்ட உதவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.