மோடி பிறந்தநாள் ஸ்பெஷல்! 20 நாட்கள் சேவை திட்டம்!
நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி பாரதிய ஜனதா சார்பில் 20 நாட்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்
டெல்லி : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 75 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி போட்டு சாதனை நிகழ்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி பாரதிய ஜனதா சார்பில் 20 நாட்கள் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த 20 நாட்களும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொள்கிறார்கள். அதில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது தடுப்பூசி மையங்களுக்கு அதிகளவில் ஆட்களை அழைத்து செல்வது போன்றவையும் அடங்கும்.
இதற்காக நாடு முழுவதும் 8 லட்சம் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மோடியின் பிறந்த நாளான இன்று 2 கோடி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி இன்று தீவிரமாக நடத்தப்பட்டது. இது போல் 20 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR