மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா வுக்கும் சொந்தமானவர் :மோடி
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவு குறித்து உரையாற்றினார். மேலும் மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சொந்தமானவர் என நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளிலும் நடந்த விடுதலை போராட்டமே நட்புறவுக்கான அடித்தளமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்திய நிறுவனங்கள் பல தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வர்த்தக உறவு மேலும் விரிவடைய பெரும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவுக்கு உறுதி பூண்டுள்ளது என்று அவர் பேசினார்.
இந்தியர்களுக்கு விசா விதிகளை எளிமைப்படுத்த தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும் அணுசக்தி நாடுகள் அமைப்பில் இந்தியா சேர ஆதரவு அளித்ததற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு மோடி நன்றி தெரிவித்தார். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இணைந்து பணியாற்ற மோடி அழைப்பு விடுத்துள்ளார்.