தீவிரமாக பரவும் COVID-19: இந்தியாவில் 918 பேருக்கு கொரொனா.. இறப்பு எண்ணிக்கை 20 ஐ எட்டியுள்ளது
கொரோனாவில் பாதிக்கப்பட்ட 862 வழக்குகள் மற்றும் 20 பேர் உயிரிழந்தவர்கள் உட்பட மொத்தம் 909 கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.
புது டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு பிறகும், இன்று (சனிக்கிழமை) ஐந்தாவது நாளிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் 28 ம் தேதி மாலை 5:45 மணி நிலவரப்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்ட 862 வழக்குகள் மற்றும் 20 பேர் உயிரிழந்தவர்கள் உட்பட மொத்தம் 909 கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அதிகம் பரவும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முன் வரிசையில் உள்ளது. வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டியதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாப்பு கியர் மற்றும் உபகரணங்கள் கோரியுள்ளனர். அங்கு 1,600 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 2.9 மில்லியன் அமெரிக்க டாலர் உட்பட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது பிப்ரவரியில் அமெரிக்கா அறிவித்த 100 மில்லியன் டாலருடன் சேர்த்து இது கூடுதலாகும்.
இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது என MoHFW தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் 909 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 20 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பங்களிப்பாக எம்.பி.எல்.ஏ.டி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.