கடந்தாண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை டெல்லியில் உள்ள அவரது வீட்டிலும் நடத்தப்பட்டது. அங்கு ரூ8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு நேரில் ஆஜராகும்படி டி.கே.சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் இதை எதிர்த்து டி.கே.சிவகுமார் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு நேற்று தள்ளுபடி ஆனதால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அவர் நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்தார்.


இந்தநிலையில், பண மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.