வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கட்டாயம் ஆதார் எண் பதிவது செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் இதுவரை, 112 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 40 கோடி வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.  சுமார் 2 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குகளில் இணைத்து வருகின்றனர்.


மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், பேடிஎம், ஏர்டெல், இந்தியா போஸ்ட் ஆகியவைகளின் மூலம் பேமெண்ட் பேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க் கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டமாக துவங்கப்பட்டது.


இந்நிலையில், மக்களின் பண பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், இனி வங்கி கணக்கு இல்லாமலேயே தாங்கள் பணத்தை செலுத்தவும், பெறவும் முடியும். இதற்காக ஆதார் எண் மூலம் சேவையை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது.


இந்திய முழுவதும் உள்ள சுமார் 650 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.