வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள பின்னணியில் ஆக்ராவில் குரங்கு நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக்ராவிற்கு சுகாதாரத் துறையால் ஒரு சிறப்பு ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது மற்றும் சுகாதாரத் துறை சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருவோரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுற்றுலாப் பயணிகள் மீது சிறப்பு கவனம்
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, ஐரோப்பாவின் சில நாடுகளில் குரங்கு அம்மை காய்ச்சலின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் அருண் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இந்த நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைக் காண ஆக்ராவுக்கு வருகிறார்கள், இதுபோன்ற சூழ்நிலையில், இப்போது சுகாதாரத் துறை குழு இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறப்புக் கவனம் செலுத்தி கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.


மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO 


இந்த நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது
மேலும் கூறிய அவர், யாருக்காவது குரங்கு காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை முதலில் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுவார்கள், இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மற்றவர்களும் பாதுகாப்பாக இருக்க முடியும்.


மேலும் குரங்கு பாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காய்ச்சலுக்குப் பிறகு உடலில் சொறி மற்றும் புண்கள் ஏற்படும் என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவா கூறினார். அவ்வாறு சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் ரத்தம், காயம் திரவம் மற்றும் சளி ஆகியவற்றின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.


இந்த நிலையில் நோயாளிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்பு கொண்டவர்களின் மாதிரிகளும் 21 நாட்களுக்குள் பரிசோதிக்கப்படும் என்றும், இதற்காக சுகாதாரத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.


இதற்கிடையில் இந்த நோய் பாதிப்பு தெரிய 7 முதல் 14 நாட்கள் வரை ஆகும். அதேபோல் ஆர்டிபிசிஆர் மாதிரிகள், கொப்பள நீர், ரத்தம், சளி போன்றவற்றை பரிசோதனை செய்யும்போது இந்நோயை கண்டறிய முடியும். மேலும் குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி அமெரிக்காவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR