கேரளாவில் ஜூன் 6ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கும்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கேரளாவில் நான்கு நாட்கள் தாமதமாக துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6 ஆம் தாக்கக்கூடும் என்று இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் (The India Meteorological Department) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இது கேரளாவில் பருவமழை சிறிது தாமதமாக துவங்கும் என வானிலை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆ ம் தேதி தொடங்கி விடும். அதாவது இந்த முறை ± 4 நாட்களில் மழை பெய்யலாம் எனத் தெரிகிறது. அதேபோல வங்கக்கடலின் அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் தென்மேற்கு பருவ மழை வழக்கம் போல் அல்லாமல், இந்தமுறை கொஞ்சம் முன்பாக துவங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில் தென்மாநிலங்களை விட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் இந்த ஆண்டு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.