புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 'மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023' மற்றும் 'ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023' ஆகியவற்றுக்கு நாடாளுமன்ற மக்களவை வெள்ளிக்கிழமை(2023, ஆகஸ்ட் 11)  ஒப்புதல் அளித்தது. முன்னதாக, தேசத்துரோக சட்டத்தை ஒழிப்பதற்கான சிஆர்பிசி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றைத் தவிர, செஷன்ஸ் நீதிமன்றம் யாராக இருந்தாலும், தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவர் இல்லாத பட்சத்தில், உலகில் எங்கு இருந்தாலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தண்டனை வழங்க முடியும் என்ற முடிவுக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  


இந்திய நீதிச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் மசோதா ஆகியவற்றை முன்வைத்த ஷா, மூன்று மசோதாக்களையும் நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்ப முன்மொழிந்தார், இதனால் இந்த மசோதாக்கள் முறையாக விவாதிக்கப்படும்.


மேலும் படிக்க | ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா? ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு: வீடியோ ஆதாரம்


ஆன்லைன் கேமிங், கேசினோவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும்
'மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ('Central Goods and Services Tax (Amendment)) மசோதா, 2023' மற்றும் 'ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023' மூலம் மக்களவையால் அங்கீகரிக்கப்பட்டது, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தய கிளப்புகளில் பந்தயம் கட்டுவதில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி ((Goods and Services Tax)) சட்டத்தில் முழுத் தொகைக்கும் 28 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.


விவாதம் இன்றி சபையில் ஒப்புதல் பெற்ற மசோதா
மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கூறிய இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காக வைத்திருந்தார் இவற்றுக்கு விவாதமின்றி ஒப்புதல் கிடைத்தது. இதன் போது பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இல்லை. சிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி சட்டங்களில் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநில ஜிஎஸ்டி சட்டத்தில் இதே போன்ற திருத்தங்களுக்கு அந்தந்த மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை மாநிலங்கள் பெற வேண்டும். இதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.


மேலும் படிக்க | பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி


திருத்தங்களுக்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்த ஜிஎஸ்டி கவுன்சில்
முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வாரம் மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (CGST and IGST) சட்டங்களில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. GST கவுன்சில், அதன் 51வது கூட்டத்தில், ஆகஸ்ட் 2 அன்று, CGST சட்டம், 2017 இன் அட்டவணை 3 இல் கேசினோ, குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றில் பொருட்கள் மீதான வரிவிதிப்பை தெளிவுபடுத்தும் வகையில் திருத்தங்களை பரிந்துரைத்தது.


வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் பண கேமிங்கில் ஜிஎஸ்டியை நிர்ணயிக்க IGST சட்டம், 2017 இல் ஒரு விதியைச் சேர்க்கவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் ஜிஎஸ்டி பதிவு பெற வேண்டும். ஆன்லைன் கேமிங், ஆன்லைன் பண கேமிங், ஆன்லைன் கேம்களுக்கு பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் கேமிங் விஷயத்தில் சப்ளையர்கள் ஆகியவற்றை இந்த மசோதா வரையறுக்கும்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி 100 முறை பிரதமரானாலும் ஆட்சேபனை இல்லை! ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ரியாக்‌ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ