ஒடிசா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்துள்ளனர். இதை கண்ட குடும்பத்தினர் பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.


இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் சுமார் 5 மணி போராட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் பாம்பு இருக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.


அதில், ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர் வனத்துறையினர். அதுமட்டும் இன்றி அந்த குட்டி பாம்புகளுடன் அவர்கள், இரண்டு ராகநாகப் பாம்புகளையும், சுமார் 21 பாம்பு முட்டைகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். 



மேலும், இவற்றை அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் விடுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.