மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள குக்ஷி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. அடிக்கடி பால் கேட்டு அழுதுகொண்டிருக்குமாம் அந்த குழந்தை. நேற்றும் அதே போல அழுதுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் கோபமடைந்தார் அனிதா. தனது குழந்தையை சமாதானப்படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை. இந்த அழுகையால் ஆததிரமடைந்து  கோபத்தின் உச்சிக்குச் சென்ற அனிதா, இரக்கமே இல்லாமல், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் சத்தம் போடாமல் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.


கைகுழந்தையை விட்டுவிட்டு தனியாக எங்கு செல்கிறாள் என அனிதா வீட்டின் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டை எட்டிப்பார்த்தனர். அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மறைந்திருந்த அனிதாவை உள்ளூக்காரர்கள் உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


குழந்தை அழுதுகொண்டே இருந்தது என்பதற்காக, பெற்ற தாயே கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.