ராஜஸ்தான் : குடும்ப தகராறில் தாய் பெற்ற பிள்ளைகளோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கணவன்-மனைவிக்கு இடையே எழும் பிரச்சனைகளால் பலரும் தவறான முடிவை எடுத்துவிடுகின்றனர்.  இது போன்ற அவலங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவது தொடர்கதையாக ஒன்றாகி வருகிறது.  இதுபோன்ற குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தான் பெற்ற 5 பெண் குழந்தைகளோடு சேர்த்து அவரும் கிணற்றுக்குள் விழுந்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ அதிகாலையில் மனைவியின் கண்முன்னே கணவரை கடத்திச்சென்ற கும்பல்


ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கலியாஹெடி கிராமத்தில் சிவ்லால் பஞ்சாரா -பதம்தேவி என்கிற தமது வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு மொத்தம் 7 பெண் குழந்தைகள் உள்ளது.  சிவ்லால் அப்பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.  இவருக்கும் இவரது மனைவி பதம்தேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.


ஒரு நாள் வழக்கம்போல் இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.  அதனையடுத்து பக்கத்துக்கு கிராமத்தில் வசிக்கும் சிவ்லாலின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அதற்கு துக்கம் விசாரிக்க சிவ்லால் சென்றுவிட்டார்.  இந்நிலையில் கணவருடனான சண்டையை நினைத்து மனமுடைந்த பதம்தேவி வாழ்க்கையை வெறுத்து 1 வயது முதல் 14 வயது வரை உள்ள தனது 5 மகள்களுடன் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துவிட்டார்.


இதனை தொடர்ந்து நேற்று காலை நேரத்தில் கிணற்றுக்குள் 6 சடலங்கள் மிதப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் 7 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் தூங்கி கொண்டிருந்ததால், மற்ற 5 குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ மனைவி கறந்தால் மட்டுமே மாடு பால் தருகிறது - போலீசில் புகார் அளித்த கணவன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR