இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, முதலிடத்தில் மோடி, இரண்டாவது தோனி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டீஷ் நிறுவனமான "யூகௌவ்", ஆண்டுதோறும், உலகின் பாராட்டத்தக்க மிகச் சிறந்த மனிதர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி, 2019 ஆம் ஆண்டில்  அதிகம் போற்றப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை  யுகவ் என்ற நிறுவனம் நடத்தியது.  நாடுகள் வாரியாகவும், உலகம் வாரியாகவும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 15 புள்ளி 56 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.


இரண்டாவது இடத்தில் இருக்கும் தோனி 8 புள்ளி 58 சதவீதம் பெற்று இருக்கிறார்.  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஏழாவது இடத்தில் உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 10-வது இடமும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 14-வது இடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 17-வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், இந்தியாவை சேர்ந்த அமிதாபச்சன், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.