தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்த அவர் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.


முகேஷ் அம்பானியின் மகள் ஹீஷா அம்பானி திருமணம் டிசம்பர் 12 தேதி மும்பையில் நடைபெற உள்ளதையொட்டி திருமணத்திற்கான அழைப்பிதழை ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்தார்.


முகேஷ் அம்பானி வருகையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதியது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.


பின்னர் சிறப்பு விமானத்தில் குருவாயூர் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல உள்ள முகேஷ் அம்பானி இன்று இரவு மும்பை செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனின் திருமண அழைப்பிதழை ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்த முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.