காதலருடன் கலக்கும் முகேஷ் அம்பானியின் மகள் புகைப்படம்!
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
முகேஷ் அம்பானி இவர் ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவருடைய மனைவி பெயர் நீதா அம்பானியாகும். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். 3-வது ஆனந்த் ஆவார்.
இதில் ஆகாஷ் அம்பானி என்பவருக்கு கடந்த மாதம் தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதையடுத்து, இவர்களது திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இஷா அம்பானியிடம் ஆனந்த பிரமோல், என்பவர் தற்போது தனது காதலை வெளிபடுத்தி உள்ளார். இவர்கள் இருவர்ம் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதத்துடன் இவர்களது திருமணம் டிசம்பரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் பிரமோல், ரியல் எஸ்டேட் நிறுவனமான Piramal Realty இன் நிறுவனர் மற்றும் Piramal Group இன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.