லக்னோ: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப்பிரதேசம் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவும் ஏற்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். 


உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறேன் எனறு சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.


சமாஜ்வாடி கட்சி கூட்டணி இல்லாமலே தனியாக போட்டியிட்டாலே வென்றுவிடும். கூட்டணிக்கு அவசியம் இல்லை. கூட்டணி பிரசாரத்திற்கு நான் எங்கும் செல்ல மாட்டேன் என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.


முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவரும் மாநில முதல்வருமான அகிலேஷ், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் இருவரும் காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையேயான கூட்டணி உத்தர பிரதேச சட்டசபைக்கான கூட்டணி மட்டும் அல்ல. அடுத்து வர உள்ள லோக்சபா தேர்தலுக்கும் தொடரும் என்றும் அது இரு கட்சிகள் இடையேயான கூட்டணி அல்ல. நட்பு அணி என தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறேன் மேலும் கூட்டணி பிரசாரத்திற்கு நான் எங்கும் செல்ல மாட்டேன் என முலாயம் சிங் யாதவ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.