ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையானுக்கு கோடி கோடியாக குவிந்த காணிக்கை
கடந்த மூன்றாண்டுகளுக்கு பின் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய ஊர்கள் பக்தர்களின் வருகை
திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து வருகிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம். இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளுக்கு பின் திருப்பதி மற்றும் திருமலை ஆகிய ஊர்கள் பக்தர்களின் வருகை காரணமாக மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளன.
மேலும் படிக்க | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் 56,559 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியலில் 5 கோடியே 41 லட்சம் ரூபாயை ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். மேலும் 22,751 பக்தர்கள் தலைமுடி சமர்பித்து மொட்டை போட்டும் கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வர துவங்கி இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானுக்கு கிடைத்த ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிடைத்த காணிக்கை வருமானம் அதிக தொகை கொண்டதாக அமைந்துள்ளது.
திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR