ஆம்வே உடல்நலம், அழகு மற்றும் வீட்டு பராமரிப்புப் பொருட்களின் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகும். ஆம்வே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) எடுத்துள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை ED பறிமுதல் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்வே நிறுவனம் மல்டி-லெவல் மார்க்கெட்டிங் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் நிலம், தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகை ஆகியவை அடங்கும்.


 அமலாக்கத்துறை 411.83 கோடி மதிப்பிலான அசையா மற்றும் அசையும் சொத்துக்களை முடக்கியுள்ளது. மேலும் 36 வெவ்வேறு கணக்குகளில் இருந்து 345.94 கோடி ரூபாய் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆம்வே இந்தியா உடல்நலம், அழகு மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பொருட்களின் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான முகவர்களைக் கொண்டுள்ளது. ஏஜெண்டுகள் மக்களை கவர்ந்து பொருட்களை விற்பதற்காக கமிஷன்கள் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 


சந்தையில் கிடைக்கும் மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான ஆம்வே தயாரிப்புகளின் விலைகள் மிக அதிகம். 2002-2003 மற்றும் 2021-22 இடையே நிறுவனம் ரூ.27,562 கோடி லாபம் அடைந்துள்ளதாக ED கூறியுள்ளது. இதில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கமிஷனாக ரூ.7,588 கோடி வழங்கப்பட்டுள்ளது.


ஆம்வே 85 க்கும் மேற்பட்ட உயர்தர தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. அதன் தயாரிப்புகளில் உடல்நலம், உடல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்பு ஆகியவை அடங்கும். நிறுவனம் தனது சலுகைகள் மூலம் பொதுமக்களை நிறுவனத்தின் உறுப்பினராக கவர்ந்திழுக்கிறது என்று அமலாக்கத்துறை ED கூறியது. அப்போது, ​​அதிக விலைக்கு தங்கள் பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்வது எப்படி என்பதை மக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். 


நிறுவனத்தின் அதன் மிக மிக விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்ய உறுப்பினர்களை சேர்த்து கமிஷன் பல நிலைகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. பொருட்களை அதிகம் விற்பவர்களுக்கு, ஊக்கதொகை, கமிஷன் என பல சலுகைகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR