PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ

PF Transfer Latest Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப்-ஐ மாற்றுவதற்கான ஆன்லைன் வசதியை வழங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 04:32 PM IST
  • உங்கள் யுஏஎன்-ஐ புதிய நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது அவசியம்.
  • பின்னர் பழைய கணக்கிலிருந்து உங்கள் புதிய கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.
  • இந்த செயல்முறையை ஆன்லைனில் செய்ய, நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.
PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ title=

புது தில்லி: உங்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொகையை முந்தைய நிறுவனத்தில் இருந்து தற்போதுள்ள புதிய நிறுவனத்தால் திறக்கப்பட்ட புதிய கணக்கிற்கு மாற்ற விரும்பினால், அதை வீட்டில் இருந்தபடியே எளிதாகச் செய்யலாம். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப்-ஐ மாற்றுவதற்கான ஆன்லைன் வசதியையும் வழங்குகிறது.

இருப்பினும், யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பணியாளரின் அனைத்து கணக்குகளும் ஒரே இடத்தில் உள்ளன. ஆனால் பணம் வெவ்வேறு கணக்குகளில் உள்ளது. எனவே நீங்கள் முதலில் உங்கள் யுஏஎன்-ஐ புதிய நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது அவசியம். பின்னர் பழைய கணக்கிலிருந்து உங்கள் புதிய கணக்கிற்கு பணத்தை மாற்றலாம். இந்த செயல்முறையை ஆன்லைனில் செய்ய, நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். 

பிஎஃப் பரிமாற்றத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:

- முதலில் https://unifiedportal mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும் . உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இங்கே லாக் இன் செய்ய வேண்டும். 

- லாக் இன் செய்த பிறகு, ஆன்லைன் சேவைகளுக்குச் (ஆன்லைன் சர்வீசஸ்) சென்று இபிஎஃப் கணக்கு பரிமாற்ற கோரிக்கைய்யை (மெம்பர் ஒன் இபிஎஃப் அகவுண்ட் டிரான்ஸ்ஃபர் ரெக்வஸ்) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இதில் நீங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிஎஃப் கணக்கை சரிபார்க்க வேண்டும். உங்களின் தற்போதைய பணி விவர தகவல்களை வழங்க வேண்டும்.

- அதன் பிறகு ‘கெட் டீடெயில்ஸ்’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். முந்தைய பணியின் பிஎஃப் கணக்கு விவரங்கள் திரையில் தோன்றும்.

- இப்போது உங்கள் ஆன்லைன் க்ளெயிம் படிவத்தை சான்றளிப்பதற்கு (அடெஸ்ட் செய்ய) முந்தைய பணியளிப்பவர் மற்றும் தற்போதைய பணியமர்த்துபவர் இடையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடும் ஹோல்டிங் டிஎஸ்சியின் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் நீங்கள் அதைத் தேர்வு செய்கிறீர்கள். ஏதாவது ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து உறுப்பினர் ஐடி அல்லது யுஏஎன்-ஐ கொடுங்கள்.

- கடைசியாக ‘கெட் ஓடிபி’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். பின்னர் அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டு ‘சப்மிட்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- ஓடிபி சரிபார்க்கப்பட்டதும், ஆன்லைன் பணப் பரிமாற்ற செயல்முறை-க்கான கோரிக்கை முந்தைய நிறுவனத்திற்குச் செல்லும்.

மேலும் படிக்க | SBI Home Loan: வங்கியின் இந்த வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட், குறைந்த விகிதத்தில் கடன் 

- இந்த செயல்முறை அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும். முதலில் நிறுவனம் பணத்தை மாற்றும். பின்னர் இபிஎஃப்ஓ-​இன் கள அதிகாரி அதை சரிபார்ப்பார்.

- இபிஎஃப்ஓ ​​அதிகாரியின் சரிபார்ப்புக்குப் பிறகுதான் உங்கள் கணக்கிற்கு பணம் மாற்றப்படும்.

- டிராக் க்ளைம் ஸ்டேட்டஸில், பரிமாற்றக் கோரிக்கை முடிந்ததா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

- ஆஃப்லைன் பரிமாற்றத்திற்கு, நீங்கள் படிவம் 13 ஐ பூர்த்தி செய்து உங்கள் பழைய நிறுவனம் அல்லது புதிய நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும்.

இவற்றில் கவனம் தேவை:

- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும் என்பதால் இந்த எண் செயலில் இருக்க வேண்டும்.

- பணியாளரின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் யுஏஎன் உடன் இணைக்கப்பட வேண்டும்.

- முந்தைய நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறிய தேதியை நினைவில் கொள்ள வேண்டும். 

- E-KYC-க்கு நிறுவனம் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்க வேண்டும்.

- முந்தைய உறுப்பினர் ஐடிக்கு ஒரே ஒரு பரிமாற்றக் கோரிக்கைதான் ஏற்கப்படும்.

- விண்ணப்பிக்கும் முன், உறுப்பினர் சுயவிவரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தவும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வைத் தொடர்ந்து பிற கொடுப்பனவுகளிலும் உயர்வு, ஊதியத்தில் பம்பர் ஏற்றம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News