மும்பை விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்காக, முனையங்களில் மாற்றங்களை செய்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: பயணிகள் மற்றும் விமான வசதிகளை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையில், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) டெர்மினல் 2 இலிருந்து இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் GoAir ஆகியவற்றின் அனைத்து சர்வதேச விமானங்களையும் ஒருங்கிணைத்துள்ளது. 


இண்டிகோ மற்றும் கோ ஏர் உள்நாட்டு விமானங்கள் டெர்மினல் 1 மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்நாட்டு விமானங்கள் டெர்மினல் 2 இலிருந்து இயங்கும் எனவும் மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது. மும்பை விமான நிலையம் 2018-2019 ஆம் ஆண்டில் 4 கோடியே 80 லட்சம் பயணிகளைக் கையாண்டு நாட்டிலேயே அதிக விமானப் பயணிகளைக் கையாண்ட விமான நிலையம் என சாதனை படைத்தது. 


அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இண்டிகோ மற்றம் கோ ஏர் நிறுவனங்கள் அனைத்து உள்நாட்டு விமானங்களை முதலாம் முனையத்தில் இருந்தும், சர்வதேச விமானங்களை 2 ஆம் முனையத்தில் இருந்தும் இயக்கும் என கூறியுள்ளது. அதேசமயம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது முழு இயக்கத்தையும் 2 ஆம் முனையத்துக்கு மாற்றிக் கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளது.



2 ஆம் முனையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களையும் மும்பை விமான நிலையம் இயக்கி வருகிறது. தற்போது, 50 சர்வேதச விமான நிறுவனங்கள், 9 உள்நாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களை மும்பை விமான கையாள்கிறது. பிரதான ஓடுதளத்தில் மணிக்கு 46 வருகை புறப்பாடுகளை கையாள்கிறது. 2-வது ஓடுதளம் மணிக்கு 35 விமானங்களைக் கையாளும் திறன்படைத்துள்ளது.