மும்பையின் கிங் சர்க்கிள் ரயில் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய இடங்கள் கனமழை காரணமாக நீர் தேங்கியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் பல நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்திருந்தது. பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.


அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று மும்பையில் அதிகபட்சம் 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று விடிய, விடிய மும்பையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 


மேலும், காலை நேரத்தில் 38 வழித்தடங்களில் பெஸ்ட் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல தானே, நவிமும்பையிலும் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 13 செ.மீ. மழையும், கொலபாவில் 8 செ.மீ. மழையும் பதிவானது. இந்தநிலையில், இன்றும் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.