பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக, நிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மார்ச் 12-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக வேண்டும் எனவும், தவரும் பட்சத்தில் Non-Bailable பிடிவாரண்ட் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



முன்னதாக இன்று PNB ஊழல் விவகாரத்தில், நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடி செய்துள்ளதாக CBI தெரிவித்தது. இதனையடுத்து தற்போது மும்பை நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.


PNB fraud...


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள தகவலின் படி ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது குறிப்பிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.


இந்த ஊழல் தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான 5,100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.


இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சம்பந்தப்பட்ட நிரவ் மோடி தலைமறைவாகி விட்டார். மேலும் இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.


இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தான் பெற்ற கடன் ரூ.5000 கோடிதான் எனவும் அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக அனைத்து வழிகளையும் வங்கி நிர்வாகம் முடக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். 


மேலும் இந்த அவசர முடிவினால் நிறுவனத்தின் பெயரும் கெட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு, இதனால் கடனைத் திருப்பிக்கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் தற்போது, வரும் மார்ச் 12-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக வேண்டும் மும்பை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.