தங்கையின் காதலனை கொடூரமாக கொலை செய்த அண்ணன்கள்...
தனது தங்கையின் காதலனை தெருவில் தாறுமாறாக குத்தி கொலை செய்த சகோதர்கள்....
தனது தங்கையின் காதலனை தெருவில் தாறுமாறாக குத்தி கொலை செய்த சகோதர்கள்....
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மலாட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சைப் அலி-யை அப்பகுதியை சேர்ந்த, 18 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் காதல் பெண்ணின் சகோதரர்களான, வாசிம் (வயது 19) மற்றும் அஜ்மல் (வயது 23) ஆகியோருக்கு பிடிக்கவில்லை. தங்கையிடம் இவர்கள் பல முறை கூறியும் கேட்காததால், சைப் அலியை நேரில் பார்த்து மிரட்டினர்.
இவர்களின் மிரட்டலுக்கு பயந்த சைப் அலி சிறுது நாட்கள் தனது காதலியை சந்திப்பதை நிறுத்தியுள்ளார். பின்னர், மீண்டும் தன் காதலியுடன் பழக துவங்கினார். இதனால் கடுப்பான பெண்ணின் சகோதரர்கள், சைப் அலியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த சைப் அலியை, அவர்களின் உறவினர்கள் கண் முன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து, அவரை வீட்டை விட்டு வீதியில் இழுத்து போட்டு, கையில் இருந்த கத்தியால், சைப்ரின் உடலில் பல இடங்களில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சைப் அலி, சிகிச்சை பலனின்றி இறந்தார். சைப் அலியை அடித்து கொன்ற வாசிம் மற்றும் அஜ்மலை, போலீசார் கைது செய்தனர்.