மும்பையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வரும் நிலையில் இன்று காலை முதல் நீண்ட நேரத்திற்கு கனமழை பெய்ததால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மேலும் கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இதனால் விமானங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கும் சூழல் உள்ளதால் பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 



கடந்த 2005 ஜூலை 26-ம் தேதிக்கு பிறகு தற்போது நீண்ட நேரம், கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. 


கடந்த 48 மணி நேரத்தில் நகரின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், நகர் மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, மிகவும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


 



 


இன்று மாலை அதிக உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும் எனவும் கூறியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 


சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் 15 நி.மி., தாமதமாக இயங்குகின்றன.


 



 


வெள்ள நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் பள்ளம் இருக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் நடக்க அச்சமடைந்துள்ளனர். வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன.