கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகுந்த வேகத்தில் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இந்நிலையில், நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக தெற்கு மும்பையில் எம்.ஜி சாலை அருகே உள்ள மெட்ரோ சினிமாஸ் பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அருகே இருந்த 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள ஜி.கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். 


 



 


இன்று அதிகாலை முதல் தொடர் மழையால் மும்பையில் உள்ள தாதர், பரேல், செம்பூர், பாந்த்ரா, அந்தேரி, போரிவலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தூறலாக பெய்த மழை பின்னர் பலத்த மழையாக பெய்து வருகிறது.