மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மும்பை சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மோசமான வானிலை மற்றும் ஒடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 


இரவு முழுக்க பெய்த கன மழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி, சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை, கோவா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 


இதுவரை 56 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வே 5 ரயில்களை ரத்து செய்துள்ளது. பகல் 12 மணியளவில் மும்பை கடலில் பிரமாண்ட அலைகள் எழும் வாய்ப்புள்ளது.