Mahalaxmi Express-ல் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு...
மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பு; மீட்புபணியில் NRDF, IAF, கடற்படையினர்..!
02:40 PM 27-07-2019
Mahalaxmi Express-ல் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!
‘#MahalaxmiExpress-ல் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுக்களின் சரியான மற்றும் உறுதியான முயற்சிகளுக்கு பாராட்டுகள்’
மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பு; மீட்புபணியில் NRDF, IAF, கடற்படையினர்..!
மகாராஷ்டிராவில் வெள்ளத்தின் நடுவே சிக்கிய ரயிலில் உள்ள சுமார் 700 பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் NRDF, IAF, கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மும்பை மற்றும் கொல்ஹாபூர் இடையே செல்லும் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தானே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. மும்பையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் பட்லபூர் - வங்கனி இடையே உல்ஹாஸ் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இன்று காலை 3 மணி முதல் ரயில் அவ்விடத்திலே நிற்கும் நிலையில் உள்ளிருக்கும் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 700 பயணிகள் அதில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரயில் பத்லாப்பூர் மற்றும் வாங்கனி இடையே 72 KM இல் நிறுத்தப்பட்டுள்ளது. பத்லாப்பூர் மும்பையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. மும்பை-கோலாப்பூர் ரயிலில் நூற்றுக்கணக்கான பீதி, பட்டினி மற்றும் தாகமுள்ள பயணிகள் மொபைல் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவி கோரி முறையீடு செய்தனர். ஏறக்குறைய 15 மணி நேரத்திலிருந்து தங்களுக்கு குடிநீர் அல்லது உணவு இல்லை என்றும், அனைத்து வழிகளிலும் ஐந்து-ஆறு அடி நீரில் ரயில் நடைமுறையில் துண்டிக்கப்பட்டுள்ளதால் தப்பிக்கும் பாதை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரெயில் பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.